We for Ourselves

We for Ourselves

Share

எமக்காக நாம்

23/05/2026

மட்டக்களப்பு வைத்தியசாலை நோயாளர் பராமரிப்பு உதவியாளர்கள் (வரையறுக்கப்பட்ட தொழில் இல்லை) என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வைத்தியசாலையில் ஒத்துழைப்பிற்கு வீட்டாக்கள் இல்லாமல் இருப்பாவர்கள் தங்கள் நோயாளிகளோடு இருப்பதற்கு இரவு பகல் என்று கூட இருப்பதற்கு வைத்துக்கொள்பவர்கள் பலர் இன்று இருக்கிறார்கள், இவர்களில் சிலர் உண்மையிலேயே வாங்கிய பணத்திற்கு (ஒரு நாளைக்கு 3000-4000 ரூபா வரை மற்றும் சிலர் ஒரு நாளைக்கு 5000-6000 வரை மூவேளை உணவுகளோடும் எடுப்பதாக தகவல்) ஒரு நேரத்திற்கு ஒரு நோயாளியை பொறுப்பெடுத்து கூட ஒருந்து பார்த்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் ஒரே நேரத்தில் அநேக நோயாளிகளை கண்காணிக்க பொறுப்பெடுத்து ஒரு நோயாளியை கூட ஒழுங்காக பராமரிக்காமல் வேறுமனே கூட இருந்து கொண்டு (சில வேளை இருப்பது கூட இல்லை) இப்படி ஒருநாளைக்கு பல்லாயிரங்களை சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

(கிட்டடியில் இவ்வாறு நோயாளர் பராமரிப்புக்கென்று பராமரிப்பாளர்களை ஒரு தனியார் ஒழுங்கு செய்வது குறித்த விளம்பரங்களை காண முடிந்தது, அது எவ்வாறு இயங்குகின்றது என்பது தெரியவில்லை, கண்காணிப்பாளர்கள், பொறுப்பாளர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை)

வைத்தியசாலையில் இதனை கண்காணிக்கவென்று ஒழுங்கமைப்பும் இல்லை, விடுதியில் வேலை செய்பவர்களுக்கு இருக்கின்ற பெரும்சுமையோடு இந்த மேலதிக சுமையை சுமக்கவும் முடியாது. அதனால் யாரும் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டால் இது ஒரு நல்ல காசு பாக்கும் தொழில் என்பதனை அறியத்தருகின்றேன்.

20/05/2026

கடற்கரையில் கச்சாங்கொட்டை

கடற்கரை காற்றோடு
கையில் சுருள் காகிதம்...
அதற்குள் நிரம்பி கிடக்கும் கச்சாங்கொட்டைகள்.

சிலது பொன்னிறமாக,
சிலது சுவை நிறைந்து,
சிலது பார்த்தாலே மீண்டும் கை நீள வைக்கும்.

அவ்வாறே வாழ்க்கையும்...

பல சந்திப்புகள் இனிமை தரும்,
பல மனிதர்கள் மனதை நிறைக்கும்.
ஆனால் கடைசியில்,
கண் படாமல் மறைந்து கிடக்கும்
ஒரு காஞ்சிப் போன,
தீஞ்சு போன, பருப்பட்ட கச்சான் இருக்கும்.

"இது கூட நல்லதாய் இருக்கும்" என்று
நம்பிக்கையோடு உடைப்போம்...

ஆனால் சில நேரம்,
அது நாக்கின் சுவையை அல்ல,
மனத்தின் சுவையையே கெடுத்துவிடும்.

அதனால்தான் வாழ்க்கை கற்றுத்தருகிறது:
எல்லாம் கையில் வந்ததற்காக
எல்லாம் இதயத்துக்குள் வரவேண்டியதில்லை...

கடைசி கச்சானும் கூட
ஒரு பாடம் சொல்லிவிட்டே போகிறது.

25/09/2025

புலி மான் வேட்டை பற்றிய காணொளிகளை பார்க்கும் போது, "மான் பாவம்" என்கின்ற என்து மூன்று மகனிடம் இப்பொழுதே சொல்லி கொடுக்க தொடங்கி விட்டேன், அதுதான் இயற்கை, நாம் சாப்பிடும் மீன், கோழி, மாடு இறைச்சிகளை போன்றே அதுவும் காட்டில் நடைபெறுகின்ற சாதாரணமான விடயம் என்று...

ஏனெனில் இப்பொழுது இயற்கைக்கு முரணான காரியங்களை மனிசர்கள் செய்து கொண்டு, அவற்றை சிறியவர்களிடம் திணித்துக்கொண்டு அவற்றை நியாயப்படுத்த தொடங்கி வருங்கால தலைமுறையை பாழாக்க தொடங்கி விட்டார்கள்.

இவர்களிடமிருந்து எங்கள் குழந்தைகளை நாம்தான் காப்பாற்ற வேண்டும்.

13/06/2025

கச்சான் பக்கற்றோடு இதே தள்ளாட்டத்தோடு வந்தான், வேணுமா என்று அவனுடை மழலைக்குரலில் கேட்டான் (அது குறை விழுந்த குரல் போல் தெரியவில்லை, மழலைக்குரல் போல்தான் இருந்தது..)

எவ்வளவு என்று கேட்டேன், நூறு ரூபாய் என்றான்.

காசை நீட்டி அதனை வேறு யாருக்கும் வில்லுங்க, இத வைச்சு கொள்ளுங்க என்றேன்...

அவன் அதற்கு சொன்ன பதிலை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை..., "இல்ல வேணாம்" என்று சொல்லி கச்சான் பக்கெற்றை நீட்டீனான்....😢

பல நேரங்களில் சோம்பேறியாக இருக்கும் கைகளில் தொழிலோடு இருக்கும் நாம் எவ்வளவு துரோகிகள் என்று சொல்லியது எனது மனது...

10/06/2025

வயதாகி தள்ளாடி பலனிழந்து நின்றும் கையேந்தி பிச்சை எடுக்கவில்லை, கைகள் இருக்க என்ன குறை என்று இந்த தள்ளாடும் வயதில் ஏதோ தெரிந்த ஒன்றை செய்து உழைக்கும் நீங்கள் ஒரு மாமனிதன் தாத்தா... 😊

02/04/2025

வைத்தியசாலையில் நன்றாய் பழக்கமான ஒரு (நோயாளி) நண்பன். திருமணமாகி சில நாட்களிலேயே மரண வியாதியினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சை பெறுகிறார், ஆனால் அது நோய் காக்கும் மருத்துவமில்லை, மரணத்தை சில மாதங்கள் பிற்போடத்தக்க ஒரு சிகிச்சையைத்தான் பெற்று வருகிறார்.

மனைவிக்கும் அவருக்கும் அது பற்றி நன்றாக தெரியும், இருவரும் அதனை முழுமையாக ஏற்று கொண்டவர்களாக வாழ்க்கையில் சில சந்தோசங்களை பகிர்ந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தெய்வத்தையும் நொந்து கொள்ளவில்லை, தற்கொலை முடிவும் எடுக்கவில்லை, பிரிந்து போகவுமில்லை, விரக்தியடையவும் இல்லை, செய்கின்ற சிகிச்சையை விட்டு விடவுமில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக என் மனதை தொட்ட. ஆச்சரியப்பட வைத்த விடயம் ஒன்று என்னவென்றால், ஒரு சில நாட்களுக்கு முன்பதாக ஒரு சிறு வியாபாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார் என்பதான்...

கடவுள் கொடுத்த தைரியம்தான் தவிர வேறொன்றுமில்லை என்றுதான் சொல்லுவேன், எத்தனையோ பேர் சிறு வியாதி பட்டாலே சொந்தங்கள் நண்பர்கள் என்று உதவியை வலிந்து கேட்க தொடங்குவார்கள், கடன் வாங்குவார்கள், பெரியதொரு தொகையை தன் குடும்பத்திற்கே சுமையாக வைத்து செல்வார்கள், குடிக்க தொடங்குவார்கள், மன வியாதிப்படுவார்கள், சில வேளை பிச்சை கேட்கவும் தொடங்குவார்கள், ஆனால் இவருக்கு ஒரு இருபத்தி ஐந்து வயது தாண்டியிருக்காது. மரணத்தை எதிர்பார்த்து நின்றாலும் வீட்டில் படுத்து கிடந்து மரண நாளை சமீபமாக்காமல், தூரப்படுத்துகிறார். மனதை மரணத்தை எண்ணி நொந்து நொந்து மன அழுத்தத்தை கூட்டாமல், ஏதோவொரு வழியில் செலவிடுகிறார்.

தற்பொழுது கிடைத்த செய்தி அவருடைய மனைவி கர்ப்பம் தரித்திருக்கிறார்கள் என்பதான்.

அந்த இளைஞனை புரிந்து கொண்ட மனைவியையும், உறவுகளையும் தந்த கடவுளுக்கே எல்லா நன்றிகளும்.

Category

Website

Address

Batticaloa
30000