Vasthu Science

Vasthu Science

Share

Vaastu shastra is an ancient science which helps one to get the natural benefits.

21/12/2021

Any tamil graduate who know about nadi reading (Astrology) and interested to do research on it..!?

15/01/2020
ராசிபலன் 30/12/2019

2020-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்

1-1-2020 முதல் 31-12-2020 வரை

அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு,கூ,கோ,ஸி,ஸீ,ஸே,ஸோ,தா உள்ளவர்களுக்கும்)

தன்னம்பிக்கைக்கு தக்க பலன் கிடைக்கும்

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், வியாழன், கேது, சனி ஆகிய 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன. சப்தமாதிபதி சூரியன், பஞ்சம அஷ்டமாதி பதியான புதன், தனலாபாதிபதியான குரு, ராசிநாதன் மற்றும் விரயாதிபதியான சனி ஆகியவற்றோடு பாம்பு கிரகமான கேதுவும் இணைவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். விரயாதிபாதியான சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப விரயங்கள் இந்த ஆண்டில் கூடுதலாக இருக்கும்.

புத - ஆதித்ய யோகம் மற்றும் செவ்வாய் பலமும் சிறப்பாக உள்ளதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சென்ற ஆண்டில் நடைபெறாத சில காரியங்கள் வருட தொடக்கத்திலேயே நடைபெற தொடங்கும். உடன்பிறப்புகளோடு ஏற்பட்ட உரசல்கள் மாறும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சப்தமாதிபதியோடு குரு கூடியிருப்பதால் குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகலாம். இதுவரை வாசல் தேடி வந்த வரன்கள் விலகிச் சென்றிருக்கலாம். அவை மீண்டும் வந்து மகிழ்ச்சிப்படுத்தும். கேது மற்றும் ராகு ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களுக்குள் செவ்வாய் நீங்கலாக மற்ற அனைத்து கிரகங்களும் வீற்றிருப்பதால், ஆண்டின் தொடக்கத்திலேயே நீங்கள் சர்ப்ப சாந்தி பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. அப்பொழுதுதான் ஏற்ற இறக்கம் இல்லாத வாழ்க்கை உங்களுக்கு அமையும்.

லாப குருவின் சஞ்சாரம்

ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான், உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 11-ம் இடம் என்பது லாப ஸ்தானமாகும். அதே குரு பகவான் 2-ம் இடத்திற்கும் அதிபதியாவார். 2-ம் இடம் என்பது தன ஸ்தானம். எனவே தனலாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது கடன் சுமை குறையும். வாங்கல் -கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிக்கு நண்பர்களும் உறவினர்களும் வழிகாட்டுவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.

குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. அந்த இடங்களுக்கு உரிய பலன்கள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும். பஞ்சம ஸ்தானம் என்பது புத்திர ஸ்தானமாகும். எனவே புத்திரப்பேறுக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கலாம். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும். படிக்கும் பிள்ளைகளாக இருந்தால் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும். அவர்களால் உதிரி வருமானங்களும் உண்டு.

சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், களத்திர வகையில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. பெற்றோர்களின் மணிவிழா, முத்து விழா, பவளவிழா போன்ற விழாக்கள் நடைபெறும். சுபச் செலவுகளும் ஏற்படும்.

9-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால், அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். தந்தை வழி சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பங்காளிப் பகை மாறும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும்.

மகர குருவின் சஞ்சாரம்

8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியிலேயே குருவும், சனியும் வக்ரம் பெறுகிறார்கள். எனவே, வீடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் போன்றவை வரலாம். தசாபுத்தி பலம் பெற்றவர்கள் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி செல்கிறார். அப்பொழுது அதன் பார்வை 4, 6, 8 ஆகிய ஸ்தானங்களில் பதிகிறது. தாய்வழி ஆதரவு கிடைக்கும். தட்டுப்பாடுகள் அகலும். நோய் நொடியில் இருந்து குணமாவீர்கள். நோக்கமறிந்து செயல்படும் பணியாளர்கள் உங்களுக்கு அமைவர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். எல்லை தாண்டி பழகியவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் இனி அகலும்.

ராகு - கேது பெயர்ச்சிக் காலம்

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிக்கிறார். 5-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். 1.9.2020-ல் இந்த இரு கிரகங்களும் பெயர்ச்சியாகின்றன. பின்னோக்கிச் செல்லும் இந்த இரண்டு கிரகங்களும் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். இந்தப் பெயர்ச்சியின் படி 10-ம் இடத்திற்கு வரும் கேதுவால், தொழிலில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் இலாகா மாற்றங்கள் வரலாம். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், அவரது வீட்டில் கேது சஞ்சரிக்கப் போவதால், சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். பத்திரப் பதிவிலிருந்த தடைகள் அகலும்.

4-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அது சுக்ரன் வீடாகும். அது சுக ஸ்தானமாக கருதப்படுகிறது. அதே போல் 10-ம் இடத்திற்கும் அதிபதியாக சுக்ரன் விளங்குகிறார். எனவே உங்களுக்கு பெண்களால் பெருமை சேரும். வாழ்க்கைத்துணை வழியே நல்ல தகவல்கள் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்வி மற்றும் தொழில் சார்பில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.

சனிப் பெயர்ச்சி காலம்

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் 29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். 13.2.2020 முதல் 22.3.2020 வரை செவ்வாய்- சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் இருக்கும் சனி, கும்பத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கிறார். இக்காலத்தில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். தன்னிச்சையாக செயல்பட முடியாது. தனவரவில் திருப்தி ஏற்படாது. ராசிநாதன் வலிமையிழந்து இருக்கும் இந்த நேரத்தில் எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்.

26.12.2020-ல் விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். இப்பொழுது ஏழரைச் சனி தொடங்கப் போகிறது. அதற்காக நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாக சனி இருப்பதால், பெரிய அளவில் பாதிப்புகளை கொடுக்க மாட்டார். திடீர் திடீரென்று மாற்றங்கள் வந்து சேரும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கையில் கிடைக்கும். விரயச் சனியாக இருப்பதால், எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்யுங்கள்.

செல்வ வளம் தரும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் விரதம்இருந்து விநாயகர், சனி பகவான், ஆஞ்சநேயர் ஆகிய மூன்று தெய்வங்களையும் வழிபாடு செய்யுங்கள். மேலும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள வைரவன்பட்டியில் உள்ள மார்த்தாண்ட வைரவர், வடிவுடையம்மன், வளர்ஒளிநாதர், அதிகார நந்தி, தென்முகக்கடவுள் ஆகியவற்றை யோக பலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபட்டு வந்தால், முன்னேற்றம் அதிகரிக்கும்.

குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்

27.3.2020 முதல் மகர ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை இருக்கிறார். அதே நேரத்தில் தனுசு ராசியில் இருக்கும் சனியும் வக்ரம் அடைகிறார். இருவரும் தங்களின் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டிருப்பதால், பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். ‘பரிவர்த்தனை யோகம்’ என்பது யோகங்களில் சிறந்த யோகமாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் சனி பகவான் குரு வீட்டிலும், தனலாபாதிபதியான குரு சனி வீட்டிலும் இருப்பதால் இரண்டு கிரகங்களுமே கெடுபலனைக் கொடுக்காது. பொதுவாக தனலாபாதிபதி விரய ஸ்தானத்திற்கு வருகிறார். விரயாதிபதி ஆதிபத்தியம் பெற்ற சனி லாப ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே விரயத்திற்கேற்ற லாபம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டுக்கிரக யோகத்தோடும், புத - ஆதித்ய யோகத்தோடும் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும்.

கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கனிவும், பாசமும் கூடும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாய்வழி ஆதரவும், சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பும் எதிர்பார்த்தபடியே சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் மற்றும் நகைகள் வாங்கும் யோகம் உண்டு. சொந்த பந்தங்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கேட்காமலேயே கிட்டும். கேட்டுப்பெற வேண்டிய சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள். புனித ஸ்தலங்களுக்குச் சென்று வரும் யோகமும் உண்டு. குலதெய்வ வழிபாடுகளை முறையாகச் செய்வதோடு பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவது நல்லது.

03/10/2019

என்னே ஒரு தச்சரின் திறமை. ஒரே கதவில் ஒரு பெண் கதவை திறப்பது போன்று செதுக்கி உள்ளார்

27/06/2019

tip for

09/03/2019

Miracles Alternative System of Medicine
Timings 9am to 2pm
Cell-8660300521

Vastu Tip #63: Water in South-East | Vastu Review 15/08/2018

Vastu Tip #63: Water in South-East | Vastu Review Vastu Tip #63: Water in South-East Running water in the South-East zone should be avoided. South-East zone represents the finances, Elderly ladies and Eldest Son in the family. A defect in South-East of the building impacts the financial stability, Health of Elderly ladies and Eldest Son in the fami...

Want your business to be the top-listed Beauty Salon in Bangalore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Venatesan Reddy
Bangalore
560064

Opening Hours

10am - 2pm