Mathivathani Hi-Tech Beauty Parlour
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mathivathani Hi-Tech Beauty Parlour, Beauty, cosmetic & personal care, Coimbatore.
07/12/2025
Multiple style layer cut....💇🏻♀️
With Asmitha Makeover Artistry – I just got recognized as one of their rising fans! 🎉
19/12/2021
MATHIVATHANI HI TECH BEAUTY PARLOUR 💆💇👸👰
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் ரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும். எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும்.
எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது. தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.
புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும்.
பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம். அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும்போது ரொம்பவும் திக்காக கன்னா பின்னாவென வளரும்.
Mathivathani Hi tech beauty parlour 👍🏻
15/08/2021
Bridal makeup 😍
19/07/2021
கூந்தலை பராமரிக்க தேவையான குறிப்புகள்!
*************************
உறுதியான கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் சத்துக்கள் மிகவும் அவசியம் அதேபோல் இரும்பு சத்து, துத்தநாகம், கொழுப்பு சத்து மற்றும் புரதச்சத்துக்களும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த அனைத்து சத்துக்களும் முடி உதிர்வு பிரச்சனையை நீக்கி முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்.
சரி இந்த பதிவில் எந்த சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அந்த சத்துக்கள் எல்லாம் எந்த உணவுகளில் உள்ளது என்பதை பற்றி இந்தப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
முடி வளர தேவையான உணவு –
வைட்டமின் A:-
*****************
முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்? தலைமுடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. இந்த வைட்டமின் சத்துக்கள் கேரட், பப்பாளி, அத்திப்பழம், ஆப்ரிகாட் ட்ரை ஃபுரூட்ஸ் போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
வைட்டமின் B5:-
******************
கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் B5 சத்து மிகவும் அவசியம். இந்த வைட்டமின் B5 சத்துக்கள் முட்டை, மஷ்ரும், சர்க்கரை வள்ளி கிழங்கு, காலிபிளவர் போன்ற உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த உணவுகளை அதிகளவு தினமும் உட்கொள்வதினால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
வைட்டமின் C:-
****************
வைட்டமின் சி உணவுகளை அதிகளவு உட்கொள்வதினால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இந்த வைட்டமின் சத்துக்கள் எலுமிச்சை, நெல்லிக்காய், முலாம்பழம், கொய்யா, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சி போன்ற பழங்களில் அதிகளவு நிறைந்துள்ளது.
இந்த பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு இயற்கையாகவே வைட்டமின் சி சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் கூந்தலின் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
வைட்டமின் E:-
****************
அதேபோல் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள அவகோடா, ஆப்ரிகாட் (Apricot), பாதாம், wheat germ oil, சூரிய காந்தி விதைகள் போன்றவற்றில் அதிகளவு உள்ளது.
எனவே இவற்றையெல்லாம் தினமும் உட்கொள்வதன் மூலம் முடி உதிர்வதை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
முடி அடர்த்தியாக வளர புரோட்டின் உணவுகள்:-
***************************
புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதினால் கூந்தலின் வளர்ச்சியை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்தலாம். புரோட்டின் முடியின் வேர் பகுதிக்கு வலுவு சேர்க்கும். எனவே சாப்பிடும் உணவுகளில் முட்டையின் வெள்ளை கரு, சிக்கன், பருப்பு வகைகள், பசும் பால், பன்னீர் போன்றவற்றை அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள். இவற்றில் உள்ள புரதச்சத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்…
முடி வளர்ச்சியை அதிகரிக்க இரும்பு சத்து:-
*****************************
முடி உதிர்வு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் இரும்பு சத்து குறைபாடுதான். எனவே முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர இரும்பு சத்து இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.
இந்த இரும்பு சத்துக்கள் பச்சை காய்கறிகளில் நிறைந்துள்ளது. முட்டைகோஸ், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரைகள், பச்சைபட்டாணி போன்ற உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது.
எனவே இவற்றையெல்லாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொள்வதினால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
Mathivathani Hitech beauty parlour,
24/12/2020
பெண்களுக்காக மட்டும்: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்துவிடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சருமபிரச்னைகளில் ஒன்று தான் இந்தமுகப்பரு. உடல் சூட்டினால் பருக்கள் ஏற்படுவதாகவும், எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. சிலருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பருக்கள் மறைந்துவிடுகிறது. சிலருக்கோ முகத்தின் அழகை சீர் குலைப்பதுபோல் குழிகள் உண்டாகி அவலட்சணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இருப்பினும், ஒருசில இயற்கைப்பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்கமுடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.
ஆவிப்பிடித்தல்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில்ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால்,பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்தசெல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்
கிராம்பு: கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும்.அதற்கு கிராம்பை நீரில்போட்டு கொதிக்கவிட்டு,குளிரவைத்து,பின் அதனை அரைத்து,பருக்கள் உள்ள இடங்களில் தடவி,15அல்லது 20 நிமிடம் ஊறவைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவவும்: அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.
சந்தனப்பொடி: சந்தனப்பொடியுடன், தயிர், கடலைமாவை மற்றும் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊறவைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.
தேன்: தேனைக்கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15 லிருந்து 20 நிமிடம் ஊறவைத்து, பால்கொண்டு முதலில் கழுவி, பின்நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம். யாரையும் எளிதில் எதிர்கொண்டு பேசுவதற்கு கூட கூச்சத்தை ஏற்படுத்தும். இந்த பருக்களை மேற்கூறப்பட்டுள்ள செலவு குறைந்த மருத்துவ குறிப்புக்களை கையாண்டு பருக்கள் இல்லாத முகத்தை நாமும் கொண்டு வருவோம்
21/12/2020
பெண்களுக்கு மட்டும்: கண்களை அலங்கரியுங்கள் கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும் பாதி அழகு வந்துவிடும்.
உங்கள் கண்கள் பெரிய இமைகளை கொண்டிருப்பின் கண் இமைகள் சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல்முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தை கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதியில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சிறிய கண்களைக் கொண்டவர்கள்: நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும். கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Coimbatore
641042
Opening Hours
| Monday | 10am - 9pm |
| Tuesday | 10am - 9pm |
| Wednesday | 10am - 9pm |
| Thursday | 10am - 9pm |
| Friday | 10am - 9pm |
| Saturday | 10am - 9pm |
| Sunday | 10am - 9pm |