Energy Pots
This 'Energy Pots' can give you a Pebbles to Elevates your Health (Physical/Mental) & Wealth (Money/Relationship). Kindly Collect & use it
உங்களுக்கு நன்றி! உங்களுடைய விலைமதிப்பில்லா நேரத்தை இங்கு செலவிடுவதற்கு.
இந்த பக்கத்தில் சுமார் 30 போஸ்ட்கள் முடிந்துள்ளன. இதற்கு முன்பும் சுமார் 39 போஸ்ட்கள் இடம் பெற்றுள்ளன.
இவற்றை வெறும் தகவல், அறிவு, கல்வியாக நம்மிடத்தில் வைக்காமல்! நாள்தோறும் பயிற்சி செய்வதின் மூலமே அவற்றில் நாம் மாஸ்டர், வல்லுனர், நிபுணத்துவம் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.
எனவே இந்தப் பக்கத்தில் இருக்கும் அனைத்து போஸ்ட்கள் குறிப்பிடும் தகவல்களையும் உள்வாங்கி நாம் அனைவரும் அன்றாடம் பயிற்சி செய்வோம். அதற்கு எதிர்வரும் மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களை ஏறக்குறைய 90 நாட்களைப் பயன்படுத்துவோம்.
இந்தப் போஸ்ட்களில் இருக்கும் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்று அல்லது நீங்கள் எதுவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, ஆசைப்படுகிறீர்களோ. எந்த ஒரு ஸ்கில்லை இந்த 3 மாதம் பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்ய ஆரம்பியுங்கள்.
90 நாட்கள் முடிந்த பின்னர் நீங்கள் அதில் அபரிமிதமான நிபுணத்துவம் பெற்றிருப்பீர்கள் என்பது உறுதி.
இன்றே இந்த தருணத்திலேயே அது எது? எந்த ஒன்று? எந்த ஸ்கில்? அதை மட்டும் இந்த 90 நாட்கள்; வேறு எதிலும் கவனம் சிதறாமல் மாஸ்டராக, யாரும் அசைக்க முடியாத வல்லுனராக ஆகப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.
தடாலடியாக செய்து ஒரே நாளில் விட்டு விடாமல் தொடர்ந்து செய்யுங்கள். சிறிது சிறிதாக. மிகக் குட்டியாக பயிற்சியை தொடங்கி தொடர்ந்து செய்யுங்கள். வெற்றியின் ரகசியம் தொடர்ந்து செய்வதில்தான் இருக்கின்றது என்பதை உணர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
உ.த., உடல் வலிமை பெற - 1 தண்டால் அல்லது 1 தோப்புக் கரணத்திலிருந்து ஆரம்பியுங்கள் (ஆய்வுகளின் படி இது நன்கு வேலை செய்யும். உங்களிடம் நீங்களே இதற்கு எந்த காரணமும், சாக்கு போக்கும் சொல்ல முடியாது! நேரம் இல்லை, உடல் ஒத்துழைக்காது, கடினமானது என்று எதுவும் சொல்ல முடியாது!)
ஒரு துறையைப் பற்றி ஆழமாக கற்க - அந்த துறை சம்பந்தமான அனுபவம் நிறைந்த நபர்களை கண்டறிந்து அவர்களுடன் நட்பு கொள்ளுங்கள் (வெறுமனே வீடியோ பார்ப்பது இல்லாமல்), புத்தகம் படித்து அதை பற்றி டிஸ்கஸ் செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம்
விளையாட்டு என்று பொதுவாக இல்லாமல் அதில் குறிப்பிட்ட ஒன்று ஸ்கேட்டிங், நீச்சல், குதிரை ஏற்றம், மரம் ஏறுதல்...
ஒரு ஸ்கில் - பேச்சுக்கலை, விற்பனைக்கலை, பாடிலேங்குவேஜ், பிறரை சிரிக்க வைக்கும் கலை, பிறருக்கு கற்றுக் கொடுக்கும் திறன், ஞாபக சக்தி....
ஒரு பழக்கம் ஹேபிட் - தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுவது, சாப்பிடும் போது நன்கு மென்று விழுங்குவது, தினமும் பிறருக்கு ஏதேனும் உதவி, ஒத்தாசை செய்வது, கோபப்படாமல் நிதானமாக மற்றவர்களின் பேச்சை கேட்பது.....
3 மாதத்தில் நான் ...................................... ல் நிபுனத்துவம் பெற்றிருப்பேன் என்பதை ஆழ்மனதில் பதிய வையுங்கள். பயிற்சி செய்யுங்கள் நிச்சயம் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு நிபுனராக உங்களை சந்திப்பதில் பெறுமகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு போஸ்ட் போடப்படும் என்பதை பனிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சக்;தியும் யுக்தியும் இறைவனிடமிருந்தே கிடைக்கின்றன.
-நன்றியுடன் - வற்மாணி ரஷீத்
29/04/2025
Tips 30 and Oil Pulling - Ayurveda Healthy Habit Mastery!
Kindly Collect your Energy Pebbles
28/04/2025
Tips 29 and Family Time, Social Well-being Awareness!
Kindly Collect your Energy Pebbles
27/04/2025
Tips 28 and Declutter - Productivity Focus Awareness!
Kindly Collect your Energy Pebbles
26/04/2025
Tips 27 and Healthy Habit - Stretching Awareness!
Kindly Collect your Energy Pebbles
25/04/2025
Tips 26 and Critical Thinking, Decision Making Practice!
Kindly Collect your Energy Pebbles
24/04/2025
Tips 25 and Communication Skill Practice!
Kindly Collect your Energy Pebbles
24/04/2025
Tips 24 and Healthy Habit - Chewing!
Kindly Collect your Energy Pebbles
22/04/2025
Tips 23 and Observation Power Practice!
Kindly Collect your Energy Pebbles
21/04/2025
Tips 22 and Communication Skill Practice!
Kindly Collect your Energy Pebbles
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Coimbatore