IRIN CARE

IRIN CARE

Share

Glad to invite you all to live a healthy life.

Photos 27/06/2017

*தொப்புளில் எண்ணை போடுங்கள்*

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

படித்ததை பகிர்கின்றேன்...

Photos 20/06/2017

*நீரே மருந்து செஞ்சு பாருங்க சந்தோஷமா இருங்க*

🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
*ஜப்பானிய நீர் சிகிச்சை*

💧தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

💧தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

💧காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

💧தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

👆இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

💊💉💴மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

🎈தலைவலி
🎈இரத்த அழுத்தம்
🎈 சோகை
🎈 கீல்வாதம்
🎈பொதுவான பக்கவாதம்
🎈ஊளைச்சதை
🎈 மூட்டுவலி
🎈 காதில் இரைச்சல்
🎈 இருதயப் படபடப்பு
🎈 மயக்கம்
🎈இருமல்
🎈 ஆஸ்த்மா
🎈 சளி
🎈 காசநோய்
🎈 மூளைக் காய்ச்சல்
🎈 கல்லீரல் நோய்கள்
🎈 சிறுநீரகக் கோளாறுகள்
🎈 பித்தக் கோளாறுகள்
🎈 வாயுக் கோளாறுகள்
🎈வயிற்றுப் பொருமல்
🎈 இரத்தக் கடுப்பு
🎈 மூலம்
🎈 மலச்சிக்கல்
🎈 உதிரப்போக்கு
🎈 நீரழிவு
🎈 கண் நோய்கள்
🎈 கண் சிவப்பு
🎈 ஒழுங்கில்லாத மாதவிடாய்
🎈 வெள்ளை படுதல்
🎈 கர்ப்பப்பை புற்றுநோய்
🎈 மார்புப் புற்றுநோய்
🎈 தொண்டை சம்பந்தமான நோய்கள்

😳நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

🔬சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

🎐 மலச்சிக்கல் - ஒரே நாளில்
🎐 வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
🎐 சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
🎐 இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
🎐 புற்று நோய் - ஆறு மாதங்கள்
🎐 காசநோய் - மூன்று மாதங்கள்

Photos 17/06/2017

ரத்த சோகையை குணப்படுத்தும் கேழ்வரகு.

கோதுமைக்கு இணையான சத்துக்கள் கொண்ட ராகியில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர்.

கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக்களை கொடுக்கிறது.

வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு.

இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு.

கேழ்வரகு கதிரில் உள்ள இலை தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும்.

குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வரகு பால் கஞ்சி:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு (முளைக்கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால்.

முளைகட்டிய கேழ்வரகை அரைத்து பால் எடுக்கவும். அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும்.
கெட்ட கொழுப்புகளை வெளித்தள்ளி, நல்ல கொழுப்புகளை உடலில் சேர்க்கிறது.

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்.

கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடாமல் பொடித்து கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும்.

இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது.

Photos 22/03/2017

கோடை வெயிலிற்கு ஏற்ற
நன்னாரியின் பயன்கள்

நன்னாரி

வேறு பெயர்
ஆனந்த மூலம்

ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.

நன்னாரி ” சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை.

இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இதை பாதாள மூலிகை என்றும் சொல்வதுண்டு.

நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை(தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.

இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேதமருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா
(Anantmula.).

நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.

சாரிபாத்யாசவம் ,சாரிபாதி வடி ,சாரிபாதி க்வாதம் ,சாரிபாதி லேஹியம் போன்ற மருந்துகளில் -இந்த நன்னாரி சேர்க்கிறது

இதன் வகை பலவகை உண்டு -

நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.

இது இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின் மேற்புறம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும்.

சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும்
மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)

அன்காரிகை மூலி யாச்சியாத்தோ டுண்ண நித்தி
யங்கா ரிகை மூலி யாளுமே-யன்காரி
பற்றாது (தேரையர் வெண்பா )

காமவல் லியனடிக் கரியுணப் பித்தமா
நேமமே கப்பிணி நிலை குலைந்தாலுமே (தேரையர்கா )

மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...

பச்சை நன்னாரி வேர் 5 கிராம்
எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும்.

நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும்.

நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
பொது குணங்கள்-

ஆயுர்வேதப்படி நன்னாரி,
மதுர ( இனிப்பு) குணமும் கசப்பும் இணைந்தது. கனமானது.

குளிர்ச்சியூட்டும். பசியின்மை, உணவு கசப்பது, இருமல், ஜுரம், உதிரப் போக்கு, இவற்றுக்கு நல்லது.

குணங்களும், பயன்களும்

நன்னாரி செடியில், வேர்களுக்குத்தான் முக்கியத்துவம். இதன் இலை, கொடி, காம்பு எதிலும் நறுமணமில்லை. மருத்துவ பயன்களும் இல்லை. நன்னாரி இனிப்பானது. எரிச்சலை குறைத்து சமனப்படுத்தும்.

வியர்வையை உண்டாக்கி, உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர் பிரிய உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

நன்னாரி சேர்க்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் அஸ்வகந்தா சூரணம், அஸ்வகந்தாதி லேஹம், சந்திரனஸவா போன்றவை.

தாவர விவரங்கள்

நன்னாரி படரும் புதர்ச் செடி/ கொடி. கங்கை சமவெளி, அஸ்ஸாம், மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்தியாவும் வளரும். நன்னாரி விஞ்ஞான ரீதியாக பயிரிடப்படுவதில்லை.

ஆனால் பரவலாக காட்டுச் செடியாக வளருகிறது. சரியான முறையில்
பயிரிட்டு வளர்த்தால், இந்த மூலிகை மேலும் மேன்மையாகும்.

நன்னாரி வேர் –

புதிய வேர் நல்ல நறுமணத்துடன் இருக்கும். காரணம் அல்டிஹைட். முதிர்ந்த வேர்களில் நறுமணம் குறைவு

பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.

ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.
வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும்.

தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும்,

ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் வெப்பத்தை தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.

முக்கியமாக மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
இதுவரை சரிவர பயன்படுத்தப்பாடதது .இதன் வேரை தொடர்ந்து பயன் படுத்தினால் எயிட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பலாம்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து கால் லிட்டர் . பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, , மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறும்.

பச்சைவேரை சிறிது இடித்து நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வரப் , , நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். ஆனால் பத்தியம் மிக அவசியம்.

ஆண்மை பெருக நன்னாரி வேர் ஊறிய நீரை இளஞ் சூடாக அருந்தி வரவேண்டும். .

இது ஒரு இயற்க்கை தரும் டானிக் உடல் தேற்றி ! கண்டவற்றை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட நன்னாரி வேர் நீரில் ஊறவைத்து தேவைய அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும் நிற்கும்.

பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும்,இதுவே மாவலி அல்லது மாகாளி ஊறுகாய் எனப்படும். சித்தமருத்துவத்தில் நன்னாரி லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.

நன்னாரியின் இதர பயன்கள்

1. நன்னாரியின் வேரை உபயோகித்து செய்யப்படும் “சர்பத்” உடல் சூட்டை தணிக்கும். கோடையில் சிறந்த பானமிது.

2. சுத்தம் செய்து நன்னாரியை ஊற வைத்த ( 24 மணி நேரம்) தண்ணீரை அரை கப் காலை; மாலை குடித்து வர, பித்த நோய், தாகம், மேக நோய், நீரிழிவு இவை குறையும்.

3. நன்னாரி வேரை கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால், வாதம், பித்தம், பக்கவாதம், பாரிச வாதம் இவை விலகும்.

4. உடல் சூட்டை தணிப்பதால், நன்னாரி நீருடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து குடித்து வர, ஆரோக்கியம் அதிகரிக்கும்.

5. யூனானி வைத்திய முறையில் ரத்த சுத்திகரிப்புக்கு நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு.

எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்

கோடைக்காலம் வந்து விட்டால் நா வரச்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது .இது உடலின் உள் வெப்பத்தை தணிப்பது .ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை பருகினால் உடலுக்கும் மனதிற்கும் குளுகுளு .
காசிற்க்கும் கேடில்லை.

1 நன்னாரி வேரை பச்சையாக நசுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து தொடர்ந்து சாப்பிட நரை, திரை மாறும்.

2 நன்னாரி இலைகளை சாப்பிட உடலில் வியர்வை நாற்றம் மாறும்.
..
[18/03, 9:15 PM] ‪+91 99657 58011‬: .3 நன்னாரி வேரை கொதிக்க வைத்து ஆற வாய்த்த நீரில் 8 மணி ஊற வைத்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு நல்ல தீர்வு. இது உடலுக்கு aircondition செய்தது போலிருக்கும்.

4 பொதுவாக நன்னாரி வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடலாம்

5 மாகாளி கிழங்கு எனும் பெரு நன்னாரி நல்ல பசி தூண்டி ஊறுகாய் செய்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்

சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.

ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி, சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள், செரியாமை, பித்த குன்மம் தீரும்.

ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இளஞ்சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிருநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.

நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்தமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மன கோளாறுகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது.

சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.

பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள்.

உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.

கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும்,

Photos 22/12/2016

மாசிக்காயானது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புத மான மருந்தாகும். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல் பூவிலிருந்து காயாகாது.

இந்த மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிடும் போது கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும்.

பொதுவாக மாசிக் காய்களைச் சேகரிக்கும்போது அதிலுள்ள பூச்சிகள் வெளியே வருவதற்கு முன்பே சேகரிப்பதுதான் சிறந்த மருத்துவப்பயன் உடையதாக இருக்கும்.

மாசிக்காயைப் பொடி செய்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

மாசிக்காயை பொடி செய்து அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டுவர, பெண்களுக்கு மாத விடாயின்போது ஏற்படும். அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.

மாசிக் காயைப் பொடித்து 50 கிராம் எடுத்து 800 மி.லி. நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்தி வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலி யவைகளும் குணமாகும்.

பொதுவாக குழந்தைகளுக்கு உரைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி நிற்கும்.

மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டதால் உண்டான நஞ்சுக்கு சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.

மாசிக்காயிலிருந்து ஒருவகை மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறம் உடைய தாய், துவர்ப்புச்சுவை கொண்டதுமான உப்பை எடுக்கிறார்கள். இது சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது.

நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிட்டு 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்திவர பலன் கிடைக்கும். தொண்டைவலி, டான்ஸிலை ட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன் 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வர குணம் தெரியும்.

மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊற வைத்தால் ஊறல் குடிநீராகவும் அல்லது கஷாய மிட்டும் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

30 முதல் 60 மி.லி. வரை அதையே உள்ளுக்கும் அருந்தி வரலாம். இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின்போது அதிக ரத்தம் வெளியாதல், மேக நோய், ஈறு களிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலியவைக ளுக்கும் கொடுக்கலாம்.

குழந்தை மருத்துவத்தில் மாசிக்காய் பல காலமாக மருந்தாக பயன்படுத்தப் பட்டு வருவதை நமது பாட்டிமார்களை கேட்டுப் பார்த்தால் கதை கதையாக சொல்வார்கள்.

சித்த மருத்துவத்திலும் மிக முக்கியமான பங்கினை பெறுவ தை அனுபவமிக்க சித்த மருத்துவர்களின் குறிப்புகளை படிக்கும் போது நன்கு உணரலாம்.

சித்த மருத்துவத்தில் மாசிக்காய் குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும். மகளிர் மருத்துவத்தில் இந்த மாசிக்காய் மருந்து பெரும் நன்மையினை தரக்கூடியதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலக் கட்டத்தில் மாசிக்காய்தான் பெண்களுக்கு வரும் வெளியே சொல்லக்கூடாத நோய்களுக்கு மருந்தாக இருந்து வந்தது.

மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்

புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டதும், மூலத்துக்கு மருந்தாக பயன்படுவதும், முகப்பருவை மறைய செய்வதும், ரத்த கசிவை போக்க கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதுமானது மாசிக்காய். பல்வேறு நன்மைகளை கொண்ட மாசிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

மாசிக்காய் கடினமாக இருக்கும் என்பதால், அதன் பொடியை வாங்கி பயன்படுத்தலாம். மாசிக்காயை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய் பொடி, சாதிக்காய் பொடி, எலுமிச்சம் பழம்.சிறிதளவு

மாசிக்காய் பொடியுடன் சிறிது சாதிக்காய் பொடி, சிறிது எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை இரவு நேரத்தில் முகப்பருவின் மீது பூசவும். பின்னர், காலையில் முகம் கழுவினால் முகப்பரு மறையும்.

மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. தசையை இறுகச் செய்வதுடன் நோய்களை தடுக்கிறது. புற்றுநோய், அல்சர் வராமல் பாதுகாக்கிறது.

மாசிக்காயில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் மற்றும் இரும்பு சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து உள்ளது. ரத்த கசிவை போக்குகிறது. புண்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை பெற்றது. மாசிக்காயை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் மாசிக்காய் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ரத்தமூலம் இருப்பவர்கள், மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். வாய் புண் தொண்டை புண் குணமாகிறது.

மாசிக்காய் பொடியை பயன்படுத்தி மூலத்துக்கான வெளிபூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய் பொடி, அகத்தி கீரை, விளக்கெண்ணெய்.

ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றவும். இதில் அகத்தி கீரையை போட்டு வதக்கவும். கீரை பொறிந்ததும் மாசிக்காய் பொடியை சேர்க்கவும். இந்த தைலத்தை வடிக்கட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதை மேல்பூச்சாக ஆசனவாயில் பயன்படுத்தும்போது, மூலம் சரியாகும். மூலத்தை சுருக்கி இயற்கை நிலைக்கு கொண்டுவரும்.

வெள்ளைப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய் பொடி, பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். ஒரு ஸ்பூன்.

மாசிக்காய் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின்னர் பால் சேர்க்கவும். இதை குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.

மாசிக்காயில் உன்னதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது, உள் மற்றும் வெளி மருந்தாக விளங்குகிறது.

பூஞ்சை காளான்களை போக்குவதுடன், நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ‘மாயபலா’ என்ற வடமொழி பெயரை கொண்ட மாசிக்காய், வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மருத்துவ பொருளாகும்
மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவ முறைகள்:-

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :-

அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை, மாதுளை, பனங்கற்கண்டு.

அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை ஆகியவற்றை சுத்தப்படுத்தி ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் மாதுளம் பழத்தின் தோல், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை என இருவேளை 100 மில்லி அளவுக்கு குடித்துவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.

இந்த தேனீர் மூலம் நோய்க்கு மருந்தாக அமைகிறது. மாமரம் மற்றும் அத்தி மரத்தின் பட்டை, மாதுளை ஆகியவை மாதவிலக்கு பிரச்னைக்கு நல்ல பலன் தருவதாக அமைகிறது.

வில்வ இலையை பயன்படுத்தி அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

வில்வ இலை, செம்பருத்தி.

50 முதல் 100 மில்லி அளவுக்கு குளிர்ந்த நீர் எடுக்கவும். இதில், சிறு நெல்லிகாய் அளவுக்கு வில்வ இலை பசை சேர்க்கவும். சிறு நெல்லிக்காய் அளவுக்கு செம்பருத்தி பூ பசை சேர்க்கவும். பின்னர், நன்றாக கலந்து காலை, மாலை என இருவேளை குடித்துவர அதிக உதிரப்போக்கு நிற்கும்.

செம்பருத்தி துவர்ப்பு சுவை உடையது. பல்வேறு நன்மைகளை கொண்ட செம்பருத்தி மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது. துவர்ப்பு சுவை உடைய பொருட்கள் ரத்தத்தை கட்டுப்படுத்த கூடியது. ரத்தத்தை கெட்டிப்படுத்தும் தன்மை கொண்டவை.

மாசிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய், தேன். அரை ஸ்பூன் அளவுக்கு

மாசிக்காய் பொடி எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.

02/12/2016

Please forward:


Drinking hot lemon water can prevent cancer. Don't add sugar. Hot lemon water is more beneficial than cold lemon water.

Both yellow n purple sweet potato have good cancer prevention properties.

01. Often taking late night supper can increase the chance of stomach cancer

02. Never take more than 4 eggs per week

03. Eating pope's nose (chicken backside) can cause stomach cancer

04. Never eat fruits after meal. Fruits should be eaten before meals

05. Don't take tea during menstruation period.

06. Take less soy milk, no adding sugar or egg to soy milk

07. Don't eat tomato with empty stomach

08. Drink a glass of plain water every morning before food to prevent gall bladder stones

09. No food 3 hrs before bed time

10. Drink less Teh Tarik, no nutritional properties but can cause diabetes and hypertension

11. Do not eat toast bread when it is hot from oven or toaster

12. Do not charge your handphone or any device next to you when you are sleeping

13. Drink 10 glasses of water a day to prevent bladder cancer

14. Drink more water in the day time, less at night

15. Don't drink more than 2 cups of coffee a day, may cause insomnia and gastric

16. Eat less oily food. It takes 5-7 hrs to digest them, makes you feel tired

17. After 5pm, eat less

18. Six types of food that makes you happy: banana, grapefruit, whole meal bread, spinach, pumpkin, peach.

19. Sleeping less than 8 hrs a day may deteriorate our brain function. Taking Afternoon naps may keep our youthful look.

Cooked tomato has better healing properties than the raw tomato.

Hot lemon water can sustain your health and make you live longer!

Hot lemon water kills cancer cells

Add hot water to 2-3 slices of lemon. Make it a daily drink

The bitterness in hot lemon water is the best substance to kill cancer cells.

Cold lemon water only has vitamin C, no cancer prevention.

Hot lemon water can control cancer tumor growth.

Clinical tests have proven hot lemon water works.

This type of Lemon extract treatment will only destroy the malignant cells, it does not affect healthy cells.

Next... citric acid and lemon polyphenol in side lemon juice, can help reduce high blood pressure, effective prevention of deep vein thrombosis, improve blood circulation, and reduce blood clots.

No matter how busy you are, please find the time to read this, then tell others to spread the love!

After reading, share with others to spread the love! To take good care of their own health!

22/11/2016

முருங்கைக் கீரையின் பயன்கள்!

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்.....

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%

Want your business to be the top-listed Beauty Salon in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Coimbatore