Gvmspecials
Believe, Learn Think & Grow up 👍❤️ ��
28/05/2025
📌Good evening 🥀🍪🌤️
Video content :
Pet-Ag Nursing Kit - 2 oz - Promotes The Natural Feeding of Liquids to Baby Animals - Each Kit Includes 2 oz.
Bottle with Cap, 5 Ni***es & Cleaning Brand..
Brand: Fifozone
Feed Supplement Mother Milk Replacement for Young Kittens 200GMS..
Overview
Introducing BIO KITTEN MILK REPLACER by BIO PETACTIVE, a premium infant food supplement designed to nurture the growth and development of kittens.
Perfectly formulated to mimic mother's milk, this milk replacer is an essential choice for pet parents looking to provide optimal nutrition for their young feline companions. Animeal proudly offers this high-quality supplement, reflecting our commitment to the health and well-being of pets..
Ingredients
Proteins, Vitamins, Minerals, and Oils: These essential nutrients ensure balanced growth, mirroring the nutritional profile of mother's milk.
Reduced Lactose:
Minimizes the risk of diarrhea, making it gentle on your kitten's digestive system.
Taurine: An essential amino acid for cats, crucial for vision, reproduction, and as an antioxidant.
L-Carnitine: Aids in the metabolism of fatty acids and converts fat into energy, supporting healthy weight and muscle development...
Key Features
Optimal Growth Support: Provides all necessary nutrients for healthy muscle and bone growth.
Digestive Health: Specially formulated to be easily digestible for kittens.
Versatile Use: Ideal for prematurely separated kittens, pregnant and lactating mothers, and elderly or weak cats and dogs.
Benefits
BIO KITTEN MILK REPLACER is more than just a supplement; it's a comprehensive nutritional solution.
It supports the overall development of kittens, ensuring they grow up healthy and strong.
This aligns perfectly with Animeal’s mission to support pet health and wellness...
How to Use
Mix BIO KITTEN MILK REPLACER with water below boiling point (80°C), then gradually add more water while stirring. Serve at body temperature (35-40°C). Consult a veterinarian for the appropriate feeding schedule and quantity.
About the Brand
BIO PETACTIVE is renowned for its commitment to high-quality pet supplements. Their products align with Animeal’s standards, ensuring pets receive the best nutritional care.
Animals Recommendation
While BIO KITTEN MILK REPLACER is available over the counter, Animeal recommends consulting a veterinarian to ensure it meets your pet's specific dietary needs.
Disclaimer
Animal provides expert-reviewed, accurate information. However, this should not replace professional veterinary advice. Always consult a veterinarian for health-related questions...
22/04/2025
உடனே Share Pannunga 🙏✔️
நல்லதே நடக்கும் 💯
22/04/2025
முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!
முருகன் உங்களுடன் இருக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? முருகன் வருகையை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்த தகவல்களை தான் இந்த பதிவில் காணப் போகிறோம்...
1. உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தை அல்லது ஆண் குழந்தை முருகனின் முக லட்சணத்தை கொண்டிருப்பார்கள். அதேபோன்று முருகனுக்கு உகந்த நட்சத்திரத்திலோ, திதியிலோ அதாவது கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திரத்திலோ செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இது போன்ற நாட்களில் பிறந்து இருந்தாலும் முருகப்பெருமான் உங்கள் வீட்டில் பிறந்து இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
2. முருகப்பெருமானை மனதார வேண்டி விளக்கேற்றும் பொழுது, அந்த விளக்கின் ஜோதி பிரகாசமாக சிறிது தூரத்திற்கு உயர்ந்து எறிந்தால், அந்த விளக்கின் ஜோதியில் முருகன் உங்கள் கண் முன் நிற்கிறார் என்று அர்த்தம்.
3. அதேபோன்று முக்கியமான வேண்டுதலுக்காக முருகனை மனதார நினைத்து விளக்கேற்றும் பொழுது, அந்த ஜோதியில் இருந்து ஏதேனும் சத்தம் ஏற்பட்டால் முருகன் உங்களது வேண்டுதலை மனதார ஏற்றுக் கொண்டு பதிலளிக்கிறார் என்று அர்த்தம்.
4. தெய்வ சக்தி இருக்கின்ற வீடுகளில் மட்டுமே பல்லிகள் அதிகம் இருந்து சத்தமிடும். தெய்வ சக்தி இல்லாத வீடுகளில் பல்லிகள் இருக்காது. முருகனை நினைத்து வேண்டும் பொழுது பல்லிகள் சத்தமிட்டால் முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்று அர்த்தம்.
5. முருகனை நினைத்து வேண்டி கொண்டிருக்கும் பொழுதோ அல்லது முருகனின் நாமங்களை பாராயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதோ, முருகன் படத்தில் இருந்து பூக்கள் கீழே விழுகிறது என்றால் முருகன் உங்கள் வீட்டில் எழுந்தருளி இருக்கிறார் என்று அர்த்தம்.
6. நீங்கள் வெளியில் செல்லும் பொழுதோ அல்லது வீட்டில் இருக்கும் பொழுதோ உங்களுக்கு சொந்தம் இல்லாத உயிரினமான மயிலோ அல்லது சேவலோ உங்கள் கண் முன் அடிக்கடி வருகிறது என்றால், முருகனின் துணை உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.
7. முருகனின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்றால் உங்கள் கனவில் அடிக்கடி வேல், மயில், சேவல் இது போன்ற முருகனுக்கு சொந்தமான பொருட்கள் வரும்.
8. நீங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கும் பொழுது உங்கள் கண் முன்னே அடிக்கடி முருகனின் படம் தோன்றுகிறது என்றால், முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்று அர்த்தம்.
9. உங்களுடைய பிரச்சனையை சரி செய்ய நீங்கள் உதவி கேட்காமலேயே ஒருவர் வருகிறார் என்றால், அவர் முருகனின் மறு உருவம் என்று அர்த்தம். உங்களுடைய மன குறை தீர்வதற்கு ஒரு வழி கிடைக்கிறது என்றாலே, முருகனின் துணை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
10. முருகன் உங்களுடன் இருக்கிறார் என்றால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் இல்லாதது போல் விபூதி, சந்தனம் இது போன்ற வாசனை வரும். வீட்டில் மட்டுமல்லாமல் வெளியில் சென்று முருகனை நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் இது போன்ற வாசனை வருகிறது என்றால் முருகன் உங்கள் உடனேயே இருக்கிறார் என்று அர்த்தம்..
22/04/2025
பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்? பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா
கருட புராணத்தின் படி ஒரு கோவிலை தவிர வேறு எந்த கோவிலுக்கும் பேய்கள் செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?
அதாவது சிவன் கோவில்களுக்கு பேய்களால் செல்ல முடியும். அதனால்தான் சிவபெருமான் "பூத நாத்" என்று அழைக்கப்படுகிறார். பூதநாத் என்ற பெயருக்கு "பூதங்கள் அல்லது பேய்களின் தலைவர்" என்று பொருள்.
சிவபெருமான் நல்லது, கெட்டது என பாராமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர். இதனால்தான் தெய்வீக ஆன்மாக்களாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு இல்லாத ஆவிகளாக இருந்தாலும் சரி சிவபெருமானுக்கு இருவருமே சமம் தான். அதனால் தான் சிவபெருமான் தீய சக்திகளின் தலைவனாகவும், அகோரிகளின் கடவுளாகவும் திகழ்கிறார்.
சிவபெருமான் பேய்களிடம் தனக்கான கோவிலை ஒரே இரவில் கட்டும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பேய்கள் ஒரே இரவில் இந்த சிவன் கோவிலை கட்டின. அந்தக் கோவிலின் பெயர் தான் "கக்கன்மாத் கோவில்". இந்த கோவிலானது மத்திய பிரதேசத்தில், குவாலியர் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகோனியாவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களுள் இதுவும் முக்கியமான ஒன்று. இந்த கோவில் பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தான் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அதுவும் சிமெண்ட், கலவை இது போன்ற எதையும் பயன்படுத்தாமல் வெறும் கற்களைக் கொண்டே இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலானது 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த கோவிலை சுற்றி உள்ள அனைத்து கோவில்களும் சேதம் அடைந்து உடைந்து இருந்தாலும், இந்த கக்கன்மாத் கோவில் மட்டும் இன்றும் பாதுகாப்பாகவே உள்ளது. மழை, புயல் என எது வந்தாலும் அந்த கோவிலுக்கு எதுவும் ஆகாமல் இருக்கிறது.
120 அடி உள்ள இந்த கோவிலின் மேல் பகுதியும், கோவிலின் கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பாதுகாப்பாக தான் இருக்கிறது. ஆனால் இந்த கோவில் எப்படி கட்டப்பட்டது என்று இன்றுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோவிலை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், 20 கிலோமீட்டர் சுற்றிலும் உள்ள எந்த ஊரிலும் அந்த கற்கள் இல்லை என்று கூறுகிறார்கள்.
இரவு நேரங்களில் அந்த கோவிலில் அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதால் மக்கள் யாரும் அந்த கோவிலுக்கு செல்வதில்லை. சிவபெருமானின் தாண்டவ நடனத்தின் பொழுது பேய்கள், பிசாசுகள், பூதங்கள் போன்ற அனைத்தும் நடனம் ஆடும் என்று புராணங்கள் கூறுகிறது..
15/04/2025
15/04/2025
இது என்ன செடி
20/02/2025
இன்று கால பைரவரை இப்படி வழிபடுங்க...துன்பங்கள் அனைத்தும் நீங்கும்..!
ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமிகள் இரண்டுமே பைரவருக்கு உரிய வழிபாட்டு நாள் என்றாலும், தேய்பிறை அஷ்டமி திதியில் மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது..
1.செல்வ செழிப்பு அதிகரிக்க 🙂:
ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்
2. வாழ்க்கையின் சிக்கல்கள் தீர :
"ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்"
3. பயம் நீங்க :
"ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்"
4. தீய சக்திகளின் தாக்கம் நீங்க :
"ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்"
5.குழப்பங்கள் நீங்க :
"ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்"
6.செல்வ வளம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் :
"ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்"
1. செல்வ செழிப்பு அதிகரிக்க :
செல்வ செழிப்பு அதிகரிக்க, மண் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி, கால பைரவர் சன்னதிக்கு முன் தீபம் ஏற்றவும். தீபம் ஏற்றும் போது, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை இரண்டு முறை ஜெபிக்க வேண்டும். பிறகு உங்களின் வேண்டுதலை மனதார காலபைரவரிடம் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். வருமானத்தில் பிரச்சனை, கடன் தொல்லை இருந்தாலும், செல்வ நிலை உயர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
2. வாழ்க்கையின் சிக்கல்கள் தீர :
வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது என்றால் காலாஷ்டமியில், ஒரு கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெய் தடவிய ரொட்டியை சாப்பிட கொடுக்கலாம். இதை செய்யும் போது, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை ஐந்து முறை சொல்லுங்கள். இந்த பரிகாரம், உங்கள் துன்பங்களை நீக்கி , மனநிறைவு மற்றும் அமைதியை வழங்கும்.
3. பயம் நீங்க :
அடிக்கடி பயம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் கால பைரவரின் திருவடியில் ஒரு கருப்பு நூலை ஐந்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இந்த நேரத்தில், "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை சொல்லுங்கள். பின்னர், அந்த நூலை உங்கள் வலது கணுக்காலில் கட்டிக் கொள்ளுங்கள். இதனால் கால பைரவரின் தெய்வீக சக்தி உங்களை பாதுகாப்பு அளிக்கும்.
4. தீய சக்திகளின் தாக்கம் நீங்க :
உங்கள் குழந்தையின் கல்வி வளர்ச்சியில் தடைகள் இருந்தால், கருப்பு எள் கொண்டு குழந்தையின் தலையை ஏழு முறை சுற்றி ஆறு அல்லது ஓடும் தண்ணீரில் வீசவும். அப்போது, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை சொல்லுங்கள். இந்த பரிகாரம், குழந்தைகள் மற்றும் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விடும்.
5. குழப்பங்கள் நீங்க :
உங்கள் வீட்டில் குழப்பம், எதிர்மறை ஆற்றல் உள்ளது என்றால், வன்னி மரம் அருகே சென்று நீர் ஊற்றி, ஒரு நூலும் செலுத்தி, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரம் ஜெபிக்கவும். இது முடியாதவர்கள், வீட்டின் வாசலில் ஏழு முடிச்சுகளுடன் இருக்கும் ஒரு நூலை கட்டுங்கள், ஒவ்வொரு முடிச்சுக்கும் மந்திரம் சொல்லுங்கள். இதனால் வீட்டில் அமைதியும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
6. செல்வ வளம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் :
பொருளாதார நிலை உயர்ந்திட, கால பைரவரை வழிபடுங்கள். அவருக்கு பூஜைகள் செய்து, மிளகு வடை காணிக்கையாக படைத்து வழிபடலாம். இதோடு, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை சொல்லுங்கள். இதனால் வாழ்க்கையில் பணநிலை உயரும் மற்றும் பணவரவு அதிகரிக்கும்.
இந்திய சந்தையில் ஏராளமான போன்கள் இருப்பதால், உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சரியான ஸ்மார்ட்ஃபோனை தேர்ந்தெடுப்பது கடினம்.
அப்படியானால், இந்த செய்தி உங்களுக்காகத்தான். இந்த ஃபோன்கள் சிறந்த செயல்திறன் மட்டுமல்ல, சக்திவாய்ந்த கேமராக்கள், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகளையும் வழங்குகின்றன. இதிலிருந்து உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோனை தேர்வு செய்யவும். இந்த பட்டியலில் போக்கோ X7 ப்ரோ 5G உட்பட நான்கு சிறந்த ஃபோன்கள் உள்ளன. இதில், நீங்கள் விரும்பும் செல்போனை தேர்ந்தெடுத்து அதை வாங்கலாம்.
போக்கோ எக்ஸ்7 ப்ரோ:
இந்த பட்டியலில் ரூ.35 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன் போக்கோ X7 ப்ரோ 5G ஆகும். இது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த ஃபோனில் 120Hz ரெஃபிரஷ் ரேட், 3,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 6,550mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரையில், OIS கொண்ட 50 மெகாபிக்சல் சோனி LVT-600 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் 20 மெகாபிக்சல் ஃபிரன்ட் ஷூட்டர் கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, IP68/69 தர மதிப்பீடு, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மூன்று வருட OS அப்டேட்கள், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான HyperOS 2.0 ஆகியவை சிறந்த அம்சங்களாகும்.
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ்:
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5G ஸ்மார்ட்போன் ஆனது, ரூ.35 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய மற்றொரு சிறந்த தேர்வாகும். இந்த போனின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங்கிற்கான சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இதில் 3,000 நிட்ஸ் உடன் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,200mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. கேமராவை பொறுத்தவரையில், OIS கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் லென்ஸ் செட்டப்பை வழங்குகிறது. இந்த போன் ஆனது IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் வருகிறது.
: மூன்று கேமரா செட்அப், ஏஐ-யின் அட்டாகாச அம்சங்களுடன் ஏசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா அறிமுகம்!
விவோ T3 அல்ட்ரா:
செயல்திறனில் நல்ல ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால், விவோ T3 அல்ட்ரா 5G போனை வாங்குங்கள். வெறும் 192 கிராம் எடையும், 7.6 மிமீ திக்னெஸ் கொண்ட இந்த போன் ஆனது கையில் பிடிப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இந்த ஃபோன் ஆனது கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 5,500mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃபிரேஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. கேமராவைப் பொறுத்தவரையில், 50 மெகாபிக்சல் Sony IMX921 மெயின் சென்சாரைக் கொண்டுள்ளது.
: Mahindra | மஹிந்திராவின் XEV9e மற்றும் BE6 மின்சார வாகனங்கள்.. ஒரே நாளில் 30,000 முன்பதிவு..!
ஒன்பிளஸ் நோர்ட் 4:
ஒன்பிளஸ் நோர்ட் 4 5G போன் ஆனது ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த போன் ஆகும். இது ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபோனில் 120Hz ரெஃபிரேஷ் ரேட் கொண்ட பிளாட் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதில் உள்ள தனித்துவமான அம்சங்களில் ஒன்று மெட்டல் யூனிபாடி வடிவமைப்பு ஆகும். இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இதன் காரணமாக இந்த போன் 30 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். கூடுதலாக, ஒன்பிளஸ் ஆனது 6 ஆண்டுகள் வரை சாஃப்ட்வேர் அப்டேட்களையும் வழங்குகிறது..
📌GOOD NEWS: 5 வருடத்திற்கு மேல் ஒரே போன் நம்பரை யூஸ் பண்றீங்களா..? அப்போ நீங்க இதை கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!
சமீபத்தில், மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2G முதல் 5G வரை உள்ள நெட்வொர்க் வேகத்துடன் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன..
இன்று மக்கள் விளையாடுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், இசை கேட்பதற்கும், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் மொபைல் போன்களை பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
இதனால், இந்தியா உலகின் முக்கியமான ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகியுள்ளது. அதேபோல், இந்தியாவில் குறைந்த விலையிலேயே நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் சேவைகள் கிடைக்கின்றன.
நெட்வொர்க் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
புதிய மொபைல் போன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், புதிய நெட்வொர்க்கிற்கு மாறுதல் மற்றும் மொபைல் எண்ணை மாற்றுதல் போன்ற செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், நீங்கள் கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக அதே மொபைல் எண்ணை பயன்படுத்தி வருகிறீர்களா? இதுபோன்ற நிலைமை உள்ளவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
நீண்ட காலமாக அதே எண்ணை பயன்படுத்துபவர்கள் மிக நேர்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் எதிலும் மோசடி செய்ய விரும்பாதவர்கள், பொய் பேச நினைக்காதவர்கள் எனக் கருதப்படுகின்றனர். மேலும், அவர்களின் மீது எந்த புகாரும் அல்லது சட்டசிக்கலும் இருக்க வாய்ப்பே இல்லை.
இதனால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கூட இவர்களை நம்பக்கூடியவர்களாக மதிப்பார்கள். இந்த தகவல்கள், மொபைல் எண்ணின் நீண்ட கால பயன்பாடு ஒரு நபரின் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது...
பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா என்ற சந்தேகம் பல பக்தர்களுக்கு இருக்கும்.
இது உண்மையா என்பதை தெரிந்து கொள்வோம்.
பழனி முருகனை ஆண்டி கோலத்தில் பக்தர்கள் தரிசிக்க சிலர் தயக்கம் காட்டுவதை கவனித்திருப்போம். பழனி முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்யவே பக்தர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.
ஆண்டி கோலத்தில் பழனி முருகனை தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமோ என்ற மூடநம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானது பழனி.
அவருடைய ஆண்டி கோலமானது அனைத்தையும் துறந்து ஞானத்தை விரும்பக் கூடிய நிலை ஆகும். தண்டாயுதபாணி சிலை வெறும் நவபாஷாணத்தால் ஆனது. முருகனை ஆண்டி கோலத்தில் பார்க்கும் போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உருவாகும்..
ஆண்டி கோலத்தில் இருக்கும் நவபாஷாண முருகனை தரிசிக்க வருபவர்களுக்கு நவபாஷாணத்தின் முழுமையான பாசிட்டிவ் கதிர்வீச்சு கிடைக்கும். திங்கள்கிழமை காலையிலேயே மலையேறி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் தவறான வழியில் பொருளையும் செல்வங்களையும் தேட கூடாது. அது சங்கடங்களை தரும்.
எதையுமே வேண்டாம் என விட்டுவிட்டால் எதுவுமே உன்னை தேடி வரும் என்பதுதான் தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் முருகனின் ஆண்டி கோலமாகும். அனைத்தையும் விட்டுவிட்டால் ராஜாவாக இருப்பாய் என உணர்த்துவது ராஜ அலங்காரம். எனவே இரு அலங்காரங்களுமே சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
பழனி முருகனை எந்த கோலத்தில் பார்த்தாலும் நமக்கு நற்பலன்கள் உண்டாகும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது...
நாரதர் தேவலோக மாங்கனியை சிவனிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. அப்போது கணபதியும் முருகனும் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டனர்.
அப்போது சிவபெருமான், உங்கள் இருவரில் யார் முதலில் உலகை சுற்றி வருகிறார்களோ அவருக்கே இந்த பழம் என்கிறார். உடனே முருகன் ஏழு உலகையும் சுற்றி வர தனது மயில் வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
ஆனால் விநாயகரோ அம்மையப்பனே தனக்கு உலகம் என கூறி அவர்கள் சுற்றி வந்து அந்த கனியை கணபதி பெற்றுக் கொண்டார். அப்போது உலகை சுற்றி வந்த முருகன், கணபதியின் கையில் இருந்த கனியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தனது தாய் தந்தையரிடம் இது எப்படி அவருக்கு கொடுக்கப்பட்டது என கேட்டார். அதற்கு அவர்கள் கணபதி தங்களை சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டதை கூறினர். தாய், தந்தையரே உலகம் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனது ஏனோ என முருகன் எண்ணினார். தனது அண்ணன் கணபதியிடமே இந்த கேள்வியை கந்தன் முன் வைத்தார்.
அம்மையும் அப்பனும்தான் உலகம் என காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது தவத்தினால்தான் என்பதை அறிந்த முருகன், பூலோகம் சென்று தவக்கோலம் பூண்டதே பழனியாண்டி ரூபமாகும். கனி கிடைக்கவில்லை என கோபித்து கொண்ட அவர் ஆண்டி கோலத்தில் காட்சித் தரவில்லை என்கிறார்கள். தன்னை வழிபடுவோருக்கு எல்லாம் கிடைக்கவே கந்தனின் தவக்கோலம் தொடங்கியது. அழகும் அறிவும் முருகனுக்குள் ஒளிவீசியது. எனவே பழனி ஆண்டிக் கோலத்தை பார்ப்பதில் தவறில்லை என்கிறார்கள்..
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Address
Tamizhagam