Village Doctor

Village Doctor

Share

அனைத்து குறிப்புகளும் அறிவு நோக்கத்?

07/03/2020

#தொப்பை_குறைக்க_வீட்டு_வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

கடுங்காய் - 10
நெல்லிக்காய்-10
தான்றிக்காய் (திரிபலா)-10

செய்முறை:

இவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும்

சாப்பிடும் முறை:

தினமும் காலை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு பிறகு இரவு சூடு தண்ணீரில் கலந்து குடிக்கவும்

பயன்கள்:

°வயிறு சுத்தம் ஆகும் கழிவுகள் வெளியேறும்
°வயிற்றில் சேரும் கொழுப்புகள் கரையும்
°ரத்த ஓட்டம் அதிகரிக்கும் உடல் சுறுசுருப்பாகும்
°உடல் சோர்வு நீங்கும்
°எடை மற்றும் தொப்பை குறையும்

குறிப்பு:
கடைகளில் திரிபலா சூரணம் என்றே விற்பனை ஆகிறது ஆகையால் நல்ல தரமானதாக வாங்கி எடுத்துக்கொள்ளுங்கள் நல்ல பலனுக்கு 60 நாள் எடுத்து கொள்ளுங்கள்

24/02/2020

Pls share and like

11/01/2020

❣️❣️❣️பயனுள்ள தகவல் மறக்காமல் பண்ணுங்க...! ❣️❣️❣️
👉👉 👈👈

27/12/2019

#தலைச்சுற்றுக்கு_கறிவேப்பிலை_தைலம்_ ! ! !

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது..

அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ….

கறிவேப்பிலை – 200 கிராம்பச்சை கொத்தமல்லி – 50 கிராம்சீரகம் – 50 கிராம்நல்லெண்ணை – 600 கிராம்பசுவின் பால் – 200 மில்லிகறிவேப்பிலையை காம்புகள் நீக்கிநன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலைஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தைத் தேய்த்துக் குளிக்கலாம். தைலத்தைத் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
Village Doctor

15/12/2019

#வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! 👇👇👇👇

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைட் என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன.

ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின் கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத் தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத் தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காது வலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத் தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும் 6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக் கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றை யும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். 9. வெங்காயத்தை சமை த்து உண்ண உடல் வெப்ப நிலை சமநிலை ஆகும். மூலச் சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற் றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குண மாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங் காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். 16. வெங்காய இரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண் டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயத்தில் குறைவான கொழுப்புச் சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத் தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது
22. வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைபிடிப்பவர்கள் வெங் காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண் ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும். 25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 27. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும். 30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும். 31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து...

Village Doctor

11/12/2019

Special breakfast

08/12/2019

சிறுகுழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுகளின் அவதானத்திற்கு!!!!

இந்த வாரத்தில் மட்டும் மூன்று குழந்தைகள் இந்த பரசிடமோல் ஓவர் டோஸினால் ஈரல் பாதிக்கப்படு சிகிச்சைகளுக்காக அட்மிட்டாகியிருக்கின்றனர். ஆகவே பெற்றோர்கள் இது விடயத்தில் அதிக கவனம் எடுப்பது நல்லது.

ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்களுக்கான பனடோல் சொட்டு் மருந்து (panadol drops) பல ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுது பாமசிகளில் கிடைக்க தொடங்கியுள்ளது.

பனடோல் சிரப்(panadol syrup), பனடோல் ட்ரொப் panadol drop)ஆகிய இரண்டும் வேறுபாடான செறிவு (dosage ) கொண்ட இரு வேறு மருந்துகள்.

அதாவது ,
சொட்டு மருந்து (Pnadol drop) முதலாவது படத்தில் உள்ள சிறிய போத்தல் 1mlல் 100mg ம் மருந்தினையும் (1Ml= 100 mg)

நாம்வழமையாக பாவிக்கின்ற பேபி பனடோல் சிரப் 1mlல் 24 mgமருந்தினையும் கொண்டுள்ளது. ( 1Ml= 24 mg)

*சிசுக்களுக்கான ட்ரொப் மருந்தானது வழமையான பனடோல் பாணியை விட 4 மடங்கு செறிவு கூடியது என்பதை கவனத்தில் கொள்க*.

உதாரணமாக, 3.75 ml சிரப் மருந்து தேவைப்படும் ஒரு 6kg குழந்தைக்கு (0.9 மில்லி)1 மில்லியை விட குறைவான அளவு ட்ரொப் மருந்து போதுமானதாகும்.

ஆகவே இந்த பனடோல் மருந்து வாங்கும் போதே உங்களது வைத்தியரிடம் அல்லது பாமசி கடைக்காரரிடம் இதன் சரியான டோஸ் அளவு பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுமாறு பெற்றோர்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். ஏனெனில் ஓவர் டோஸ் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது.

பெற்றோர்கள் இது விடயத்தில் சரியான அளவு "டோஸ்" வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வேண்டிக் கொள்ளப்படுகன்றனர்.

இது குறித்த ஆடியோ மெசேஜ் இந்த லிங்கில் கண்டு கொள்ளலாம்
https://m.facebook.com/story.php?story_fbid=10156180474116658&id=732426657.
*
Please note that Panadol infant drops are back in stock in Sri Lanka after an absence of approximately 3 years. It is a welcome return as comparatively smaller quantities are required and therefore easier to administer to infants.

However, the dosage of the drops (100mg/1ml) should not be confused with that of the liquid syrup as it is more than 4 times the concentration of the children’s syrup (24mg/1ml).
This confusion and dosage errors led to its withdrawal from the market 3 years ago.
For example, a 6kg infant will require 0.9ml of the infant drops as compared to 3.75ml of the liquid syrup.

Village Doctor

07/12/2019

⛔பிராய்லர் கோழி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா? ⛔

பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம். அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது. மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர். மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது.

இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. மிக குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. பெண்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உடம்புக்கு நல்லது. உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இரும்பு சத்துள்ள முருங்கை கீரை, உளுந்த கஞ்சி, மாதுளம் பழம், எல்லா சத்தும் நிறைந்த பழமான கொய்ய பழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ளுங்கள். நவ்வாப்பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை நன்றாக குறைக்கும்.

Village Doctor

Photos from Village Doctor's post 06/12/2019

❣️❣️பல்வேறு வியாதிகளுக்கான எளிய மருத்துவ குறிப்புகள்❣️❣️

❣️❣️மிகவும் பயனுள்ள தகவல்.. தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே.!!❣️❣️
👉👉 👈👈

Want your business to be the top-listed Beauty Salon in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Colombo
32400