Nila's Book Nook
A little nook for those who love stories, poetry, and peaceful reads. Curated by Nila, for readers who believe books are magic.
27/04/2026
😊
27/04/2026
💯
18/01/2026
தனக்கென எதையும் கேட்காது,
பெற்றாலும் அதில் உரிமை கொள்ளாது,
துன்பம் தன்னைக் தளுவிய போதும்
பிறரின் நிம்மதியை முதலில் நினைத்து.
வலி வந்தால் தன்னை மறந்து,
கண்ணீரை புன்னகையாய் மாற்றி,
தன் கனவுகளை ஓரம்கட்டி
மற்றொருவரின் வாழ்வை உயர்த்தி,
அழகு பார்க்கும் இந்த பண்பை
அன்பென்று சொல்வது எளிது,
அதை வாழ்வாக மாற்றுவது அரிது;
அத்தகைய தியாகம் நிறைந்த உறவுக்கு
இணையான உறவு இவ்வுலகில் எது?
17/01/2026
“மாமா!
வாக்கிங் போய்ட்டு வர்றப்போ
பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!”
என்று லட்சுமி,
தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள்.
“சரிம்மா!”
என்றபடி வீட்டிலிருந்து இறங்கினார் சிவராமன்.
நடக்கத் தொடங்கிய சில அடிகளிலேயே
ஒரு எண்ணம் மனதுக்குள் மெதுவாக நுழைந்தது.
“பாலும் காய்கறியும் வாங்க சொல்லிட்டா…
பணம் தர வேண்டாமா?
என் பென்ஷன் பணம்
கண்ணுக்கு உறுத்துதோ?”
அந்த எண்ணத்தை ஒதுக்க முயன்றபடியே
நடைப்பயிற்சியை முடித்தார்.
பாலும் காய்கறிகளும் வாங்கிக்கொண்டு
வீட்டுக்குத் திரும்பினார்.
வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே
தன் மகன் ஆனந்த்,
கடுமையான குரலில்
லட்சுமியிடம் பேசுவது கேட்டது.
தோட்டச் செடிகளை வேடிக்கை பார்ப்பது போல
வாசல் அருகே நின்றுவிட்டார் சிவராமன்.
“லட்சுமி!
நீ பாட்டுக்கு அப்பாவைக் கடைக்கு அனுப்பினியே…
பணம் கொடுத்தியா?”
“கொடுக்கலை.
மாமாவோட பணத்துலயே
வாங்கிட்டு வரட்டுமே…”
என்று லட்சுமி அமைதியாகப் பதிலளித்தாள்.
“ஏன்?
நான் வாங்குற எழுபதாயிரம் ரூபாய்
குடும்பத்துக்குப் போதலையா?
அப்பாவோட மருந்து மாத்திரை செலவுக்குக் கூட
நம்மகிட்டயா அவர் பணம் கேட்கிறார்?”
ஆனந்தின் குரலில்
கோபம் தெளிவாகத் தெரிந்தது.
“அய்யோ! அதுக்கில்லீங்க…”
என்று மென்மையாகத் தொடங்கினாள் லட்சுமி.
“அத்தை உயிரோட இருந்த வரைக்கும்
மாமாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனா இப்போ
வீட்டுச் செலவையெல்லாம்
நீங்களே பார்க்கிறதால,
ஒரு காபி கேக்குறதுக்குக் கூட
மாமா சங்கோஜப்படுறார்.”
சிறிது நின்று,
உள்ளத்திலிருந்து வந்ததைச் சொன்னாள்.
“சுயமரியாதையோட வாழ்ந்தவர் மாமா.
இப்போவும் ‘குடும்பத்துக்குத்
நானும் செலவு பண்றேனே’
என்னும் உரிமை
அவருக்கு தேவை.
இப்போ குடும்பத்துக்கு
தானும் செலவு
பண்றோமேன்னு
எதையும் உரிமையா கேட்பார். ”
“மாமாவோட
மருந்து, மாத்திரை செலவெல்லாம்
இனி நாம வாங்கிக் கொடுப்போம்.
அவங்க அவங்க செலவ
அவங்க அவங்களே பார்த்துக்கிறதா
இருக்கணும்னு இல்லை குடும்பம்.”
“ஒருத்தருக்கொருத்தர்
பகிர்ந்துக்கிறதுதான்
குடும்பம்…”
லட்சுமியின் வார்த்தைகள் முடியும் போது
ஆனந்தின் குரல் தணிந்திருந்தது.
வாசலில் நின்றிருந்த
சிவராமனின் கண்களில்
ஒரு மென்மையான நிம்மதி.
எதுவும் சொல்லாமல்,
மனநிறைவோடு
வீட்டுக்குள் நுழைந்தார் சிவராமன்.
14/01/2026
ஒரு சிறைக்கைதிக்கு
அவனுடைய மனைவி
ஒரு நாள் கடிதம் எழுதியிருந்தாள்.
“அன்புள்ள கணவருக்கு…
நீங்கள் சிறைக்குச் சென்ற பிறகு
நானும் குழந்தைகளும்
வருமானமின்றி தவிக்கிறோம்.
நம் வீட்டின் பின்னால் உள்ள
கற்பாறை நிறைந்த நிலத்தை
பண்படுத்தி,
ஒரு சிறிய தோட்டம் அமைத்து
காய்கறி பயிரிட்டு
குடும்பத்தை நடத்தலாம் என்று நினைக்கிறேன்.
ஆனால்…
அந்த நிலத்தை எப்படித் தோண்டுவது
எனக்கு வழி தெரியவில்லை.”
அவன் உடனே பதில் எழுதினான்:
“குடும்பச் செலவுக்கு
வேறு ஏதாவது வழி பார்த்துக் கொள்.
பின்னாலிருக்கும் அந்த நிலத்தில்
கை வைக்காதே.
அங்குதான்
நான் கடத்திய
தங்கக் கட்டிகளை
புதைத்து வைத்திருக்கிறேன்.
நீ தோண்ட ஆரம்பித்தால்,
பிறகு நான் வைத்த இடம்
எனக்கே மறந்து போய்விடும்.”
ஒரு வாரம் கழித்து…
மனைவியிடமிருந்து
மீண்டும் ஒரு கடிதம் வந்தது:
“அன்புள்ள கணவருக்கு…
யாரோ ஒரு கூட்டத்தினர்
பெரிய பொக்லைன் இயந்திரத்துடன் வந்து
நம் கொல்லைப் புறத்தை முழுவதும் தோண்டி,
பாறைகளையெல்லாம் அகற்றிவிட்டார்கள்.
இப்போது நிலம் அழகாக சீராகி விட்டது.
ஆனால்…
தங்கக் கட்டிகள் மட்டும்
எதுவும் கிடைக்கவில்லை!”
அவன் சிரித்துக்கொண்டே
மீண்டும் பதில் எழுதினான்:
“அவர்கள்
காவல்துறையினர்தான்.
நான் எழுதிய கடிதத்தைப் படித்து,
தங்கம் தேடும் ஆசையில்
நிலத்தைத் தோண்டியிருப்பார்கள்.
ஆனால் உண்மையில்…
அங்கே நான்
தங்கம் எதுவும்
புதைத்து வைக்கவில்லை!”
“இப்போது நிலம் சீராகிவிட்டதே…
நீ நிம்மதியாக
காய்கறித் தோட்டம் அமைத்து
பயிரிடு!”
🌟 கதையின் கருத்து
புத்திசாலி எங்கிருந்தாலும்
தன் காரியத்தைச் சாதிப்பான்.
சிறைக்குள்ளிருந்தாலும்…
சுதந்திரம் இல்லையென்றாலும்…
அறிவும் யுக்தியும் இருந்தால்,
வழி கண்டிப்பாக கிடைக்கும். ✨
14/01/2026
ஒருநாள்,
ஒரு பெண் முகம் முழுக்க காயங்களுடன்
டாக்டரை பார்க்க வந்தாள்.
டாக்டர்:
“என்னம்மா… முகத்துல இவ்வளவு அடிப்பட்டிருக்கு?”
பெண்:
“டாக்டர்…
என் கணவர் தினமும் என்னை அடிக்கிறார்…”
டாக்டர் காயங்களுக்கு மருந்து போட்டுவிட்டு,
சிரித்தபடி சொன்னார் –
“இனிமே உன் கணவன் கோபமாக வந்தா,
வாய்ல கொஞ்சம் தண்ணி ஊத்திக்கோ…
முழுங்காதே…
அவர் தூங்குற வரைக்கும்
வாய்க்குள்ளே வைத்துக்கோ.
அடுத்த வாரம் என்னை வந்து பார்!”
ஒரு வாரம் கழித்து…
அந்தப் பெண்
மிகவும் பிரஷ்ஷாக,
சிரித்த முகத்தோடு வந்தாள்.
பெண்:
“டாக்டர்…
நீங்க சொன்ன மாதிரியே
வாய்க்குள்ள தண்ணி வச்சிருந்தேன்…
என் கணவர் என்னை
ஒரு தடவ கூட அடிக்கல டாக்டர்!” 😄
டாக்டர் சிரித்தபடி சொன்னார் –
“GOOD!
நீ வாயை திறக்காம இருந்ததால்தான்
எந்த பிரச்சனையும் வரல!”
“உங்க ‘வாய்’ தாம்மா
எல்லாத்துக்கும் காரணம்!” 🤣🤣
“அதுக்குத்தான்
இந்த ஐடியா!” 😆
🌟 இந்தக் கதையின் உண்மையான அர்த்தம்
இந்தக் கதை ஒரு ஜோக் தான்…
ஆனால் இதுக்குள் ஒரு சின்ன மெசேஜ் இருக்கிறது:
👉 சில நேரங்களில்
அமைதி + பொறுமை
பெரிய சண்டைகளைக் கூட
சிறியதாக மாற்றிவிடும்.
14/01/2026
ஒரு காலத்தில்,
எகிப்திய வணிகர்களிடம்
ஒரு அற்புதமான பழக்கம் இருந்தது.
ஒவ்வொரு நாளும்,
கடையைத் திறந்தவுடன்
அவர்கள் கடை வாசலில்
ஒரு நாற்காலியை வைத்துவிடுவார்கள்.
அன்றைய முதல் வாடிக்கையாளர்
வந்து பொருள் வாங்கிச் சென்றதும்,
உடனே அந்த நாற்காலியை
கடை வாசலிலிருந்து
உள்ளே எடுத்துவைப்பார்கள்.
அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
👉 “இந்தக் கடையில்
இன்றைய முதல் வியாபாரம்
நடந்துவிட்டது” என்பதற்கான
அமைதியான அறிவிப்பு அது.
அடுத்த வாடிக்கையாளர்
அவர்கள் கடைக்கு வந்தால்…
கடைக்காரர் வெளியே வந்து,
சுற்றிப் பார்த்து,
எந்தக் கடையின் முன்
இன்னும் நாற்காலி இருக்கிறதோ
அந்தக் கடையை சுட்டிக் காட்டி சொல்வார்:
“எங்களிடம் இன்று
வியாபாரம் நடந்துவிட்டது.
ஆனால் அந்தக் கடையில்
இன்னும் தொடங்கவில்லை.
தயவு செய்து,
உங்களுக்கு வேண்டியதை
அங்கே வாங்கி
அவருக்கும் உதவுங்கள்.”
இதுதான் உண்மையான வியாபார நெறி
சக வியாபாரியின்
கடை இன்னும்
திறக்கப்படாத நிலையில் இருக்கும்போது,
தான் மட்டும் லாபம் பார்ப்பது சரியல்ல
என்ற உயர்ந்த மனப்பான்மையே
இந்த பழக்கத்தின் அடிப்படை.
🌟 வரலாறு சொல்லும் உண்மை
👉 போட்டி இருந்தது…
👉 ஆனால் பொறாமை இல்லை.
👉 லாபம் இருந்தது…
👉 ஆனால் சுயநலம் இல்லை.
இத்தகைய
நல்லுணர்வு கொண்ட மனப்பான்மைதான்
அந்தக் காலத்தில்
எகிப்திய வியாபாரங்களை
செழித்து வளரச் செய்தது
என்று வரலாறு சொல்கிறது.
13/01/2026
ஜப்பானில் நடந்த ஒரு உண்மை சம்பவம் இது.
ஜப்பானில் பெரும்பாலான வீடுகள்
மரத்தால் கட்டப்பட்டவை.
இரண்டு மரத்தட்டுகளுக்கிடையில்
சிறிய இடைவெளி விட்டு
சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஒருநாள்,
ஒரு ஜப்பானியர்
தன் வீட்டை புதுப்பிப்பதற்காக
பழைய மரச்சுவரை அகற்றினார்.
அப்போது…
அந்த இடைவெளியில்
ஒரு பல்லி சிக்கிக் கொண்டிருப்பதை
கண்டார்.
அதன் காலில்
ஒரு ஆணி பதிந்திருந்தது.
அவர் அதிர்ச்சியடைந்தார்.
அந்த ஆணி
குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு
அடிக்கப்பட்டதாகத் தெரிந்தது.
அப்படியானால்…
இந்தப் பல்லி
மூன்று ஆண்டுகள்
எப்படி உயிரோடு இருந்தது?
இந்த கேள்விக்கு விடை காண,
அவர் அந்த இடத்தில்
வேலையை நிறுத்தி வைத்து,
அந்தப் பல்லியை
கவனிக்கத் தொடங்கினார்.
சிறிது நேரம் கழித்து,
அவருக்கு இன்னொரு அதிசயம்…
ஒரு மற்றொரு பல்லி
அந்தச் சுவரை நோக்கி வந்தது.
அது,
தன் வாயில் கொண்டு வந்த
சிறு உணவுத் துண்டுகளை
சுவரில் சிக்கியிருந்த
அந்தப் பல்லிக்கு
மெதுவாக ஊட்டியது.
அந்த மனிதன்
வியப்பில் உறைந்துபோனார்.
👉 மூன்று ஆண்டுகள்…
👉 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…
👉 எந்த புகழும் தேடாமல்…
👉 ஒரு உயிர், இன்னொரு உயிரை
பாதுகாத்துக் கொண்டிருந்தது!
🌟 இந்தக் உண்மை கதையின் உண்மை அர்த்தம்
ஒரு சாதாரண பல்லியால்
இவ்வளவு பெரிய
பாசத்தையும் பொறுப்பையும் காட்ட முடிந்தால்…
பத்து மாதம் சுமந்து,
நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டுவந்த
தாய்–தந்தைக்கு,
அவர்கள் பலவீனமாகும் காலத்தில்
நாம் ஒரு தட்டுச் சாப்பாடு
வைத்து கொடுக்க முடியாதா.....
13/01/2026
வீடு வீடாகப் பொருட்கள் விநியோகிக்கும்
ஒரு சிறுவன்…
அவனுக்கு ரொம்ப பசித்தது.
எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால்,
கையில் ஒரு காசும் இல்லை.
அருகிலிருந்த ஒரு வீட்டில்
ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என்று நினைத்து,
அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
ஒரு பெண் கதவைத் திறந்தாள்.
கேட்க வேண்டும் என்று நினைத்தான்…
ஆனால் கூச்சம்.
வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டன.
தயக்கத்துடன் அவன் கேட்டான், கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?”
அந்தப் பெண்
அவன் கண்களில் இருந்த பசியைக் கண்டுவிட்டாள்.
அமைதியாக உள்ளே சென்று,
ஒரு கப் பால் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன்,
நன்றியுடன் கேட்டான்—
“இது மிகப் பெரிய உதவி, நான் உங்களுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேன்.... ”
அவள் சிரித்தபடி சொன்னாள்—
“கடனா?
அப்படி ஒன்றும் இல்லை.
அன்பான செயலுக்கு
விலை எதுவும் இல்லைன்னு
என் அம்மா சொல்லியிருக்காங்க.”
“ரொம்ப நன்றி…”
என்று புன்னகையுடன் சொல்லி
அந்தச் சிறுவன் சென்றான்.
ஆண்டுகள் கடந்தன…
அதே சிறுவன்,
கஷ்டப்பட்டு…
முட்டி மோதி…
படிப்பை முடித்து,
மருத்துவம் படித்து,
அந்த நகரிலேயே
மிகப் பெரிய மருத்துவராக மாறினான்.
அந்தச் சமயத்தில்,
அந்தப் பெண்ணுக்கு
ஒரு கொடிய நோய் வந்தது.
அதே மருத்துவர் பணியாற்றிய
மருத்துவமனையிலேயே
அவளும் அனுமதிக்கப்பட்டாள்.
அந்த டாக்டரிடமே
அவளுடைய கேஸ் வந்தது.
மெடிக்கல் ரிப்போர்ட்டில்
அவளுடைய ஊர் பெயரைப் பார்த்ததும்,
அவருக்குள் ஒரு சின்ன மின்னல்…
உடனே வார்டுக்குச் சென்று
அவளைப் பார்த்தார்.
அவள்தான்…
அன்று பசியாற பால் கொடுத்த அந்த தாயுள்ளம்.
அந்த நாளிலிருந்து,
அவள் மீது
முழு கவனமும்,
முழு உழைப்பையும் செலுத்தி
சிகிச்சை அளித்தார்.
நீண்ட சிகிச்சைக்குப் பிறகு
அவள் குணமானாள்.
ஆனால்…
பல லட்சங்கள் செலவானதால்
மருத்துவமனை ஒரு பெரிய பில்லை அனுப்பியது.
“இதை எப்படி கட்டப் போகிறோம்?”
என்று நடுங்கும் கையால்
அந்தப் பெண் பில்லைக் திறந்தாள்.
அந்த பில்லின் கடைசியில்
கையால் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்—
“இந்த பில்லை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
ஒரு கப் பாலில்
உங்கள் கடன் முழுவதும்
தீர்க்கப்பட்டுவிட்டது.
— இது நான் உங்களுக்கு நன்றி சொல்லும் நேரம்!”
அவளின் கண்களில்
கண்ணீர் துளிகள் மின்னின.
அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல…
அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர்
DR. HOWARD KELLY (1858–1943) தான்.
📜 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(குறள் 226)
பொருள்:
வறியவர்களின் பசியைப் போக்குவது தான்,
செல்வம் பெற்ற ஒருவன்
எதிர்காலத்தில் தனக்கே உதவும்
மிகச் சிறந்த முதலீடு.
❤️ கடைசி வரி....
நீ இன்று காட்டும் ஒரு சின்ன அன்பு,
நாளை உனக்கு
ஒரு பெரிய ஆசீர்வாதமாக
திரும்பி வரலாம்.
அன்பை விதையுங்கள்…
நன்றி தானாக விளையும் 🌱
13/01/2026
ஒரு நாள்,
கடலில் விளையாடிக் கொண்டிருந்த
ஒரு சிறுவனின் செருப்பு காணாமல் போனது.
வருத்தத்தோடு அவன் கடற்கரையில் எழுதினான் –
“இந்தக் கடல் ஒரு மாபெரும் திருடன்!”
அதே கடற்கரையில்,
சற்றுத் தூரத்தில்,
ஒரு மீனவர் அதிகமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அவர் எதிர்பார்த்ததை விட
பல மடங்கு மீன்கள் வலையில் சிக்கின.
மகிழ்ச்சியில் அவர் எழுதினார் –
“இந்தக் கடல் ஒரு பெரும் கொடையாளி!”
அதே கடலில்,
ஒருவன் நீந்திச் சென்றபோது
துரதிர்ஷ்டவசமாக மூழ்கிவிட்டான்.
தன் மகனை இழந்த தாய்
வலி கலந்த கண்ணீருடன் எழுதினாள் –
“இந்தக் கடல் மனிதர்களைக் கொன்று குவிக்கிறது!”
அதே கடலுக்குச் சென்று,
ஒரு வயதான மனிதர்
முத்துக்களை வேட்டையாடி வந்தார்.
மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் எழுதினார் –
“இந்தக் கடல் ஒன்றே போதும்…
நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு வாழலாம்!”
அடுத்த நொடி…
ஒரு மாபெரும் அலை வந்து
அவர்கள் அனைவரும் எழுதிய
அந்த வார்த்தைகளையெல்லாம்
அழித்துவிட்டு சென்றது.
🌟 இந்தக் கதையின் அர்த்தம்
👉 கடல் மாறவில்லை…
👉 ஆனால் மனிதர்களின் அனுபவம் மாறியது.
👉 அனுபவம் மாறியதால்
அர்த்தமும் மாறியது.
அதனால்…
பிறர் சொல்வதையே
முழுமையாக நம்பிவிடாதே.
ஏனெனில்,
இந்த உலகத்தை
ஒவ்வொருவரும்
அவரவர் பார்வையில்தான் பார்க்கிறார்கள்.
🌼 கடைசி வரி
உன் மனம் தூய்மையாக இருந்தால்,
உன் பார்வையும் அழகாக இருக்கும்.
அப்போது…
இந்த உலகமும்
உனக்கு
அழகாகத்தான் தெரியும். ✨
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo